வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று இரண்டாம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.*

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று இரண்டாம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.*
X
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று இரண்டாம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் போக்கை கண்டித்து நீதிபதியை பணியிட மாற்றம் செய்யக்கோரி சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று இரண்டாம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகே ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்தில் தற்போது மாவட்ட நீதிபதியாக மீனா குமாரி செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து வழக்கறிஞர்களை சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பதாகவும் ஆடு மாடுகளை போல் வருவதாகவும் தொடர்ந்து அவமானப்படுத்துவதை கண்டித்தும் காவல்துறையை கைக்கூலியாக வைத்துக்கொண்டு தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து கைது செய்ய ஊக்கப்படுத்தும் போக்கை கண்டித்தும் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி மீனா குமாரி பணியிட மாற்றம் செய்யப்படும் வரை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஞானமோகன் தலைமையில் இன்று இரண்டாம் நாளாக நீதிமன்றத்தை புறக்கணித்து சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story