இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
X
இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார், பள்ளி மாணவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகளை குறித்து தத்துரூபமாக நடித்து காட்டினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ் தளத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி முதலுதவி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மையம் திறப்பு விழா மற்றும் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவ செளந்திரவல்லி மற்றும் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்துக்கள் குறித்து ஆட்சியர் முன் தத்துரூபமாக நடித்து காட்டினர் இந்த நிகழ்வில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாநில செயலாளர் வேதவியாஸ், மாவட்ட சேர்மன் கிஷோர் பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொருளாளர் பாண்டியன், தாலுக்கா சேர்மன் வடிவேல் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story