நாட்றம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை!

நாட்றம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை!
X
நாட்றம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் இவர் மெக்கானிக்காக பணி செய்து வருகிறார். இவருக்கு போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 5 வருடமான நிலையில் அவ்வப்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்டை போட்டுக்கொண்டு ஜெயப்பிரதா சுமார் ஆறு மாத காலமாக அவரது அம்மா வீட்டில் வசித்து வருவதால் மனம் உடைந்து போன சக்திவேல் இன்று நிலத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டுச் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசார்க்கு கொடுத்த தகவலின் பெரில் விரைந்து வந்த போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்த நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தோல்களை ஏற்றிக்கொண்டு லிப்டில் சென்ற கூலித் தொழிலாளி லிப்ட் பழுதாகி உயிரிழப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கலீம் (38) இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ள நிலையில், கலீம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள (முஸப் லெதர் ஃபினிஷர்ஸ்) என்ற தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் இன்று பணிக்கு வந்த கலீம் தோல் பொருட்களை தொழிற்சாலையில் உள்ள லிப்டில் ஏற்றிக்கொண்டு மேல்மாடியிற்கு சென்றுள்ளார், அப்பொழுது திடீரென லிப்ட் பொழுதாகி மேலிருந்து கீழே விழுந்துள்ளது, இதில் லிப்டில் இருந்து கலீமிற்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் கலீமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Next Story