திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிமுகவினர் புகார் மனு, உடனடியாக நிறைவேற்றப்படும் என நகராட்சி ஆணையர் உறுதி...*

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிமுகவினர் புகார் மனு, உடனடியாக நிறைவேற்றப்படும் என நகராட்சி ஆணையர் உறுதி...* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36வார்டுகளிலும் தெருவிளக்கு, கால்வாய்களில் தூர்வார்தல், குண்டுகுழி உள்ள சாலை, நகர பகுதிகளில் உள்ள சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் வாணியம்பாடி மெயின் ரோடு ஆகிய மூன்று சுடுகாடுகளில் மின்விளக்கு, மரம், செடி, கொடி கொண்டு புதர்களாகவும், மின்விளக்கு எரியாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக கட்சியின் திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி. டி. குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய கோரி திருப்பத்தூர் நகராட்சி ஆணையரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுவை பெற்று கொண்ட நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுகவினரிடம் உறுதி அளித்தார்.
Next Story

