பாணாவரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பாணாவரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
X
பாணாவரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாணாவரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தாகூர் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பாணாவரத்தை அடுத்த நாகத்தங்கல் கிராமத்தை சேர்ந்த ரங்கையா என்பவரின் மகன் பாலாஜி என்கிற தங்கபாலு (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story