காவேரிப்பாக்கம்:சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

X
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், 2025-26-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, சிறப்பு நிதி திட் டத்தின் கீழ் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லதாநரசிம்மன் தலைமை தாங்கினார். ஆட்சியர் சந்திரகலா, வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் அம்சா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் வரவேற்றார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டி, பணிகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூர் செயலாளர் நரசிம்மன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

