செங்கல்பட்டு ஸ்ரீ ரெங்கா மருத்துவமனையில், மேமோகிராமுடன் கூடிய மார்பக மருத்துவ மையம் துவக்கம்

X

செங்கல்பட்டு ஸ்ரீ ரெங்கா மருத்துவமனையில், மேமோகிராமுடன் கூடிய மார்பக மருத்துவ மையம் துவக்கம்
செங்கல்பட்டு ஸ்ரீ ரெங்கா மருத்துவமனை மற்றும் சென்னை பிரஸ்ட் சென்டர் இணைந்து, தென்மாநிலத்தில் முதல்முறையாக, 'ஏஐ' உதவியுடன், மேம்படுத்தப்பட்ட மேமோகிராமுடன் கூடிய, மார்பக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மைய துவக்க விழா, மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிச்சுமணி தலைமையில்,கடந்த 2ம் தேதி நடந்தது.சப் - கலெக்டர் மாலதி ஹெலன் பங்கேற்று திறந்து வைத்தார். சென்னை பிரஸ்ட் சென்டர் இயக்குநர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், ரெங்கா மருத்துவமனை நிறுவனர் அனுராதா பிச்சுமணி மற்றும் டாக்டர்கள் தேன்மொழி, பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இம்மையத்தில், மேம்படுத்தப்பட்ட '3டி ஹாலோஜிக் மேமொகிராபி' சாதனம், 'ஜீனியஸ் ஏஐ' வசதியுடன், அதிக துல்லியமாக மார்பக அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இயந்திரம் மூலமாக, பயாப்ஸி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, டாக்டர் பிச்சுமணி தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், குடும்ப நல உதவியாளர் பயிற்சி மையம் முதல் முறையாக துவக்கப்பட்டு, மூன்று மாத பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, சப் - கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்.
Next Story