வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்... வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ், அசோக் லைலேண்ட், டி வி எஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்று 5000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர் . இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி பங்கேற்று வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் மாதத்திற்கு ஒரு முறை மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது . கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை நாடுநர்கள் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கு பெற்று சுமார் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை நாடுனர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது அதில் பயின்று இதுவரை 21 நபர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் மூலம் பொது பிரிவில் 315 பயனாளிகள் சுமார் 25.7 லட்சம் ரூபாய் உதவி தொகையும் 48 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு சுமார் 4.82 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே இவ் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்குபெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்தார்.. மேலும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.
Next Story

