திருப்பத்தூரில் வீரவணக்க பேரணி

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 59 விவசாய்களின் ஈக்கத்தால் 16 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் விளைவாக உழவர்களுக்கு உரிமை மின்சாரம் கிடைக்க காரணமாக இருந்து உழவர் போராளிகளுக்கு வீரவணக்கம் பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 59 விவசாயிகளின் இயக்கத்தால் 16 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் விளைவாக உழவர்களுக்கு உரிமை மின்சாரம் கிடைக்க காரணமாக இருந்து உழவர் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பேரணியாக கையில் உழவர் கொடி ஏந்தி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரையப் விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்பட 200 கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்றனர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் முடிவுற்று உயிர் தியாகம் செய்த உழவர்களுக்கு நினைவு கூறும் வகையில் வீர வணக்கம் கோசங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்றனர் நெல், மற்றும் கரும்பு. கேழ்வரகு , உள்ளிட்ட தானியங்களுக்கு விலை உயர்வு பெறவும் பால் விலை உயர்த்த கோரியும் தடுப்பணைகளை கட்டவும், சீரழிந்து வரும் பாலாற்றை பாதுகாக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வடிவேல் சுப்பிரமணியன் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பால் உற்பத்தியாளர் அணி தலைமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் விவசாயிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

