விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

X

அரூரில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம். 14 வாகனங்கள் பறிமுதல்
அரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் மற்றும் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். கடந்த மாதம் முழுவதும் 330 வாகனங்கள் தணிக்கை செய்தனர் அப்போது விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.4,52,535 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முறையான ஆவணம் இல்லாத 14 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் தெரிவித்துள்ளார்
Next Story