மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடிய கனிமொழி எம்பி

மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடிய கனிமொழி எம்பி
X
தூத்துக்குடி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குன்றென நிமிர்ந்துநில் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடலை நிகழ்ச்சியை கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து சட்ட கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது சட்டக் கல்லூரி மாணவ மாணவிகளுடன் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் புத்தகங்களை வழங்கினார்கள் இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி இந்த நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளது பார்க்கும்போது தந்தை பெரியாரின் கனவு பேரறிஞர் அண்ணாவின் கனவு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெண்கள் படிக்க வேண்டும் என்ற வகையில் தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது திட்டங்களின் பலன்களை தற்போது காண முடிகிறது தமிழக முதல் க ஸ்டாலின் நான் முதல்வன் திட்ட மூலம் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் அதன் வழியாகத்தான் தற்போது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 99 சதவீதம் மாணவ மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு சேர்ந்துள்ளனர் பெரிய சாதனையாக கருதப்படுகிறது சட்டக் கல்லூரி சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் நன்கு படித்து சிறந்த வழக்கறிஞர்கள் மாறிவிட முடியும் அதையும் தாண்டி சமூகத்தை மாற்றக்கூடிய வழக்கறிஞர்களாக மாற வேண்டும் இருக்கக்கூடிய சட்டம் படிக்கும் மாணவிகள் இது போதும் என்று இருக்கக் கூடாது எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் மேலும் இந்த மாணவர்கள் நாட்டை நல்ல சிந்தனைகள் உடன் நியாயங்கள் எல்லோருக்குமான நியாயங்களாக மாற்றம் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதைத்தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவ மாணவியுடன் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story