சந்தைபேட்டையில் ஆடுகள் விற்பனை ஜோர்

சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை வார சந்தையில் ஞாயிறுதோறும் ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம் இன்று ஜூலை 06 நடைபெற்ற வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் இன்று சிறிய அளவிலான ஆடுகள் 5,000 ரூபாய் முதல் பெரிய அளவில ஆடுகள் 22,000 ரூபாயில் வரை சுமார் 40 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Next Story