நடுவனேரியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

X
சேலம் மேற்கு மாவட்டம் மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடுவனேரியில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனியப்பன் வரவேற்றார். மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, அய்யாவு, கதிரவன், ராஜமாணிக்கம், சண்முகம், தகவல் தொழில்நுட்ப வேல்முருகன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story

