சேலத்தில் பா.ம.க. இளைஞர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

சேலத்தில் பா.ம.க. இளைஞர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
X
அருள் எம்எல்ஏ பங்கேற்பு
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்க நிர்வாகிகள் கூட்டம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மாநில இணை பொது செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஊடகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 25-ந்தேதி டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளில் மரக்கன்று, நல உதவிகள் வழங்குவது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி மகளிர் அணி மாநாடு மற்றும் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் ேதர்தலில் இளைஞர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் சதாசிவம், மாநகர மாவட்ட செயலாளர் கதிர்.ராஜரத்தினம், மாவட்ட தலைவர் கோவிந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், தலைவர் லட்சுமணன், தெற்கு மாவட்ட செயலாளர் பச்சமுத்து, மாணவர் மாவட்ட தலைவர் கோவிந்தன், அமைப்பு செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story