சேலத்தில் ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாம்

X
சேலம் மேற்கு தொகுதி குமாரசாமிப்பட்டி 15-வது வார்டு 172-வது பாகம், சக்தி நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், சேலம் முன்னாள் எம்.பி.யுமான எஸ்.ஆர்.பார்த்திபன் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் வன்னியர் நல வாரிய உறுப்பினருமான வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

