சேலம் அருகே கருப்பூாில் விவசாயிகள் மாநில மாநாடு

X
சேலம் கருப்பூரில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் வாசு, வெங்கடாசலம், லட்சுமண பெருமாள், ஆறுமுகம், கவுரவ தலைவர் ரேணு, ஆறுமுகம் மணிமொழி, மாரப்ப கவுண்டர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் வரவேற்றார். மாநாட்டில், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரிப்பால் அதன் வீழ்ச்சி ஏற்பட்டு மா விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆந்திரா அரசு போன்று தமிழக அரசு மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் இருந்து பத்மவாணி கல்லூரி வரை விவசாயிகள் ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தி விவசாயிகள், காளை மாடுகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
Next Story

