சங்ககிரியில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சங்ககிரியில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
X
செயற்பொறியாளர் தகவல்
மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சங்ககிரி கோட்ட மின்நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்கி குறைகளை கேட்கிறார். எனவே சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story