சேலத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர்

சேலத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர்
X
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்கத்தினர் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும் எடையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு சேதார கழிவு வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story