தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி கட்டுமான பொருட்கள் பரிசோதனை மையத்திற்கு தேசிய தர சான்று

X
சேலத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டுமான பொருட்கள் தர சோதனை மற்றும் ஆலோசனை மையத்திற்கு என்.ஏ.பி.எல். தேசிய தர சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த மையம் நவீன உபகரணங்கள் மற்றும் அதிநவீன ஆய்வக வசதிகள் மூலம், கட்டுமான துறையில் தேவையான அனைத்து கட்டிட பொருட்களும் தர பரிசோதனை செய்யப்படுகின்றது. இதுவரை இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்.பி.சி. சோதனைகள், 750-க்கும் மேற்பட்ட கான்கிரீட் கலவை வடிவமைப்புகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளன. கட்டிடங்கள், சாலைகள், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இதன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் சேவைகள் பொதுப்பணித்துறை, சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், தெற்கு ெரயில்வே உள்பட 25-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளாலும், வீ.டெக்னாலஜிஸ், ஜி.எம்.எஸ்., ஐ.வி.ஆர்.சி.எல்., பாஸ்கரன் அன்கோ உள்பட 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 150-க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் இந்த மையத்தில் பரிசோதிக்கப்படுகின்றன, அதில் 61 சோதனைகள் என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை மையத்தினை சிறந்த முறையில் வழிநடத்தி வரும் கல்லூாியின் இயக்குனர் கார்த்திகேயனையும், என்ஜினீயர் லோகநாதன் மற்றும் அவரது குழுவினரையும் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் என்.ஏ.பி.எல். சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
Next Story

