ஓமலூர் அருகே தெருநாய்கள் கடித்து நடக்க முடியாமல் தவித்த புள்ளிமான்

ஓமலூர் அருகே தெருநாய்கள் கடித்து நடக்க முடியாமல் தவித்த புள்ளிமான்
X
வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரக பகுதியில் டேனிஷ்பேட்டை ஊராட்சி ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவிலுக்கு பின்புறம் 2 வயதுடைய பெண் புள்ளிமான் தெருநாய்கள் கடித்த நிலையில் காயத்துடன் நடக்க முடியாமல் கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து டேனிஷ்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த புள்ளி மானை மீட்டு வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் ஹேமா, காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த புள்ளிமானை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Next Story