அசாமில் கனமழை: கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

X
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் முபா - திஹாகோ ெரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மண், சேறு, பாறைகளால் ெரயில் பாதையே தெரியாத அளவுக்கு சேதமாகி மூடியுள்ளது. இதையடுத்து அங்கு ெரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல ெரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, கோவையில் இருந்து சில்சார் பகுதிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சில்சார் - கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12516) கடந்த 8-ந் தேதி 19.30 மணிக்கு சில்சாரில் இருந்து புறப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) அன்று 11.55 மணிக்கு கோவை சந்திப்பை அடைய திட்டமிடப்பட்ட ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவை - சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12515) வருகிற 13-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவையில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு வருகிற 16-ந் தேதி அதிகாலை 3.55 மணிக்கு சில்சார் சென்றடையும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

