சேலம் மத்திய சிறையில் கைதி சாவு

சேலம் மத்திய சிறையில் கைதி சாவு
X
போலீசார் விசாரணை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் நித்யானந்தன் (வயது 57). மோசடி வழக்கில் சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 6-ந்தேதி அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறை போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யானந்தன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story