சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி நிறுவனர் பிறந்தநாள் விழா:

X
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி நிறுவனர் தனபாலன் பிறந்தநாளையொட்டி இந்திய அளவில் முதல் முறையாக சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த ‘1,000 சட்ட விழிப்புணா்வு’ என்ற வீடியோ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி பி.ஜோதிமணி தலைமை தாங்கினார். சென்ட்ரல் சட்டக் கல்லூரி தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். கல்லூரியில் நடந்த இளைஞர்கள் நாடாளுமன்ற போட்டியின் இறுதி போட்டியும், பரிசளிப்பு விழாவும் நடந்தது. போபால் தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஜயகுமார் இறுதி போட்டியை தொடங்கி வைத்து பேசினார். பரிசளிப்பு விழாவில் உதவி பேராசிரியர் புஷ்பவனம் வரவேற்றார். கவர்னன்ஸ் மேக்னிபை-இயக்குனர் ஞானசேகர் வாழ்த்தி பேசினார். இளைஞர் நாடாளுமன்ற சிறந்த போட்டியாளர்களாக மெர்லின் சோபியா, லோக விகாஸ் ஆகியோருக்கு ஜெனீவா, சுவிட்சர்லாந்து செல்லவும், கோபிகா, ஹரிஷ் ஆகிேயாருக்கு இலங்கை தமிழ் கலாசார மையத்தை பார்வையிடவும், முகமது சபி, ஸ்ருதி ஆகியோருக்கு நேபாள கலாசார பரிமாற்ற பயணத்திற்கும், யஷ்வந்த், மவுனீஷ்குமார் மற்றும் மோகன பிரியா ஆகியோருக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் சட்டக்கல்லூரி பேராசிரியர் நடராஜன், சட்டக்கல்லூரி நிறுவனர் தனபாலனின் வாழ்நாள் சாதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரி டீன் கீதா, துணை முதல்வர் சாந்தகுமாரி மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியை சுவேதா நன்றி கூறினார்.
Next Story

