அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

X
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரகர நாட்டாமங்கலத்தை சேர்ந்த வெங்கடாஜலம் (வயது 65), விவசாயி. இவர் ஆடுகளுக்கு தழைகளை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள கிணற்றில் தவறி அவர் விழுந்தார். இதை பார்த்த அவரது மகன் பூவரசன் தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவர் நீரில் மூழ்கியதால் முடியவில்லை. பின்னர் உடனடியாக பூவரசன் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து வெங்கடாசலம் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

