ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மலைவாழ் மக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

X
பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இணைந்து மலைவாழ் மக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, தோட்டக்கலை பயிர்களுக்கான இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி சங்கர் கலந்து கொண்டு, உயர் விளைச்சல் தரக்கூடிய பிரெஞ்ச் பீன்ஸ் ரகங்களின் உற்பத்தி முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி உரையாற்றிய ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மாலதி, பிரெஞ்சு பீன்ஸ் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்தும் மலைவாழ் மக்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார். ஏற்காடு தோட்டக்கலை உதவி இயக்குனர் கோவிந்தராஜ், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். பிெரஞ்சு பீன்ஸ் பயிரில் பூச்சிகள் தாக்குதல் குறித்தும், அவற்றை மேலாண்மை செய்யும் முறைகள் குறித்தும் செந்தில்குமார் விளக்கினார். பிெரஞ்சு பீன்ஸ் சாகுபடி தொழில் நுட்பங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. பேராசிரியர் சாரா பர்வீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலைவாழ் மக்களுக்கு உயர் விளைச்சல் தரக்கூடிய பிரெஞ்சு பீன்ஸ் விதைகள், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள், காய்கறி நுண்ணூட்ட கலவைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன திட்ட உதவியாளர்கள் சூரிய மூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Next Story

