தாதகாப்பட்டி அரசு பள்ளி அருகில் ஊட்டச்சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

X
சேலம் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அங்கிருந்த ஊட்டச்சத்து மாத்திரைகளை மர்ம நபர்கள் தீயில் போட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்னதானப்பட்டி போலீசாரும் விசாரிக்கின்றனர்.
Next Story

