சோனா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

X
சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா கல்லூரியின் ஸ்ரீவள்ளியப்பா கலையரங்கத்தில் நடந்தது. கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் மைகாதர் நவாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ராம்குமார் சேசு கலந்துகொண்டு பேசினார். மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் மெட்ரிக் கல்வியில் படித்து 550-க்கு மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ.யில் படித்து 450-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் மோகனப்பிரியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சோனா நிறுவனங்களின் இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் செந்தில்குமார், முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
Next Story

