சேலத்தில்சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில்சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
காலி பணியிடங்களை நிரப்ப கோரி
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயகலா தலைமை தாங்கினார். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிபணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பிட வேண்டும். கிராம சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story