ஆட்டோ டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற

ஆட்டோ டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற
X
மூன்று வாலிபர்கள் கைது
சேலம் சின்னபுதூர் அடுத்த தண்ணீர் கிணற்றுக்காடு பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் இவர் வாடகைக்கு ஆட்டோ ஒட்டி வருகிறார். நேற்று சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அருளானந்தத்தை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்து சென்றனர். இது பற்றி அருளானந்தம் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நெத்திமேட்டு சேர்ந்த காளிதாஸ், அன்னதானப்பட்டி அப்துல் ரசாத், பாவேந்தர் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் ஆகியோர் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காளிதாஸ், அப்துல் ராசாத், ஜனார்த்தனன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூபாய் 1780 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story