ஓமலூர் அருகே அங்கன்வாடி பணியாளர் வீட்டில் நகை,பணம் திருட்டு

X
ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராமம் பருப்புமில் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர், ராமலிங்கம் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூ.11 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நகை, பணத்தை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

