இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு

X
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2-வது வார்டு பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) மாட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாட்டையாம்பட்டி மற்றும் தூதனூர் பகுதியில் பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று மனுக்கள் ெபறப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம், நகராட்சி ஆணையாளர் பவித்ரா, துணைத்தலைவர் தளபதி மற்றும் பலர் உடன் இருந்தனர். முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களது குறைகளுக்கு தீர்வு காண, முகாமில் கலந்துகொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மீதமுள்ள வார்டுகளுக்கு இந்த முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

