சேலத்தில் சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த விவகாரம்

சேலத்தில் சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த விவகாரம்
X
அங்கன்வாடி ஊழியர் பணி இடைநீக்கம் .
சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாத்திரைகள் கடந்த 9-ந் தேதி இரவு பள்ளி வளாகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து மனித உரிமை கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர் பிருந்தா (வயது 48) என்பவரிடம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி விசாரணை நடத்தினார். அப்போது, அவர் எலிகளால் சேதப்படுத்தப்பட்ட மாத்திரைகளை தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார். இருப்பினும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்தது ஏன்? என்பது குறித்து அங்கன்வாடி ஊழியர் பிருந்தாவிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர் பிருந்தாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார். அதேபோல், அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் குணம்மாள் (55), குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி (57) ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Next Story