சிந்தாமணி கிராமத்தில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை தான் எனது அடுத்த இலக்கு என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பேச்சு.

சிந்தாமணி கிராமத்தில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை தான் எனது அடுத்த இலக்கு என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பேச்சு.
X
சிந்தாமணி கிராமத்தில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை தான் எனது அடுத்த இலக்கு என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பேசினார்..
அரியலூர், ஜூலை.15- சிந்தாமணி கிராமத்தில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை தான் எனது அடுத்த இலக்கு என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பேசினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றிய கழக இளைஞர் அணி சார்பில்,சிந்தாமணி கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 - வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதில், தலைமை கழக சொற்பொழிவாளர் எசனை ஆறுமுகம் தலைமை கழக இளம் பேச்சாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை தான் எனது அடுத்த இலக்கு. தா.பழூரை தாலுக்காவாக தரம் உயர்த்தப்படும் என  பேச்சினார்.
Next Story