நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

X
NAMAKKAL KING 24X7 B |16 July 2025 10:36 AM ISTநாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் காலை 10.00 மணியளவில் தமிழ் நாட்டின் கல்விக் கண் திறந்த காமராசரின் 122ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இன்று காலை பள்ளியில் காமராசர் புகைப் படத்தை பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும், பள்ளியின் பொருளாளர் க. தேனருவி அவர்களும் திறந்து வைத்தார்கள், பள்ளியின் பொருளாளர் பேசுகையில் “நமது தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்த நாள், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, காமராசரின் பிறந்த நாளை உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் கொண்டாட காரணம் என்ன என்பதை சிந்திக்கும் போது தனிமனித ஒழுக்கம் நிறைந்தவர் காமராசர் என்றும், அவருடைய நாட்டுப் பற்றுமே உலகமே போற்றும் மாமனிதராக விளங்கினார். மாணவர்களாகிய நீங்களும் தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் உலகப் புகழ் அடையலாம். தமிழக வரலாற்றில் பிரிக்க முடியாத தலைவராக காமராசர் அவர்கள் இருப்தைப் போல நீங்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும், கல்விக்கும் தொண்டு செய்து வாழ வேண்டும்“ என்று கூறி அனைவருக்கும் காமராசர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வாழ்த்தினார். பள்ளி மாணவ, மாணவியர்கள் காமராசரின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றை கலைநிகழ்ச்சிகளாக பேசியும், கவிதை வாசித்தும், நடித்தும் காட்டினார்கள். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கலைநிகழ்ச்சியல் கலந்துகொண்ட மாணவ. மாணவிகளுக்கு புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story
