ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

X
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கேடயத்தில் இடம் பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களை திரும்ப பெற்று, திருக்குறளை திருத்தம் செய்து சில தினங்களில் மீண்டும் வழங்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story

