கறம்பக்குடி: லாரி மோதி வாலிபர் பலி!

X
கறம்பக்குடி அருகே வடக்கு புதுப்பட்டியை சேர்ந்தவர் பசுபதி (33). இவர் சம் பவத்தன்று பைக்கில் வடக்கு புதுப்பட்டி அருகே வந்தபோது எதிரே குளந்திரான்பட்டு கிராமத்தில் இருந்து மணப்பாறை நோக்கி தைல மரங்களை ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பசுபதி கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு முதலுதவி சிகிச்சைக்காக பின்னர் புதுகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகு றித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் மானியவயலை சேர்ந்த ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

