தாவீகா மாநாட்டு பணிகள் தொடக்கம்

X
மதுரை அருகே த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு ஆக. 25 ல் நடக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்த நிலையில், போலீசார் இன்னும் அனுமதி வழங்காத போதும் மாநாட்டுக்கான பந்தல் பணிகளை நேற்று (ஜூலை .22) தொடங்கினார்கள். மதுரை- -- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு மாநாட்டுக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி போலீஸ் எஸ்.பி., அரவிந்தை சந்தித்து ஆனந்த் மனு கொடுத்த நிலையில் மாநாடு அமைக்கும் இடத்தை சுத்தம் செய்யும் பணியை த.வெ.க.,வினர் நேற்று துவக்கினர். மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில் மேடை அமைப்பதற்கான பலகைகள், இரும்பு பேரிகாட் (தடுப்புகள்), கூடாரம் கொண்டு வரப்பட்டு நூற்றுக்கணக்கான பணியாளர்களால் பணி தொடங்கியுள்ளது.
Next Story

