மதுரை கூலித் தொழிலாளி படுகொலை

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (28) என்பவர் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதிலும், ஒன்றரை மாதத்திலும் இரு ஆண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் (ஜூலை.21) இரவு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் வில்லூர் செட்டியார் தெரு பகுதியில் இரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் ஒன்று கடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் வில்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க , ரொம்பவே இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கூலித்தொழிலாளி சிவா என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர் விசாரணையில் அதே பகுதியில் உள்ள செல்லப்பாண்டி என்பவர் வீட்டில் சிவா உட்பட மூன்று பேர் இரவில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.அதில் அவர்களுக்குள் நடந்த தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் மேலும் சிவாவை வீட்டுக்குள்ளேயே கொலை செய்து அவரது உடலை தரதரவன இழுத்து வந்து வீதியில் போட்டு சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

