அச்சுதானந்தன் மறைவு: தூத்துக்குடியில் அஞ்சலி!

X
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு தூத்துக்குடியில் சிபிஎம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கே. பி.ஆறுமுகம் தலைமையில் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் இரங்கல் உரையாற்றினார். நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ஜுனன், ஆர்.ரசல், தா.ராஜா, இரா.பேச்சி முத்து, பா.புவி ராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் காசி, இடைக்கமிட்டி செயலாளர்கள் தூத்துக்குடி மாநகர் எம்.எஸ்.முத்து, ஒன்றியம் கே.சங்கரன், ஶ்ரீவைகுண்டம் நம்பி ராஜன், ஆழ்வார் திருநகரி ரவிச்சந்திரன், கருங்குளம் மணி உட்பட பலர் கலந்து கொண்டு அச்சுதானந்தன் படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சிபிஎம் ஒன்றிய, நகரக்குழு சார்பாக அஞ்சலி, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
Next Story

