உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முற்றுகையிட முயற்சி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முற்றுகையிட முயற்சி
X
கயத்தாறு சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, தேவர் குளம் சாலையை சீரமைக்கவும் கயத்தாறு நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்மத்உசேன் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமை முற்றுகையிட வந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாசில்தார் சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி சீனிவாசன் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் எபனேசர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு பணிகளையும் ஒரு வார காலத்திற்குள் நடைபெறும் எனவும் வாக்குறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்மத்உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ. எம். லத்தீப், மாவட்டத் துணைச் செயலாளர் பீர்மைதீன், பேரூர் கழக மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் செய்யதுஅலி, பேரூர் பொருளாளர் ஜபருல்லாகான், ஊடகப்பிரிவு ஷேக்அலி, அப்துல் ரகுமான், மானங்காத்தான் கிளை தலைவர் அல் அமீன், மற்றும் அப்பாவை மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story