ஈச்சம்பட்டி கிராமத்தில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு
குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தற்போது ஆலை உரிமம் பெறுவதற்கு, குரும்பலூர் பேரூராட்சியில் பத்து வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் மனு
ஈச்சம்பட்டி கிராமத்தில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு. பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிராமப்புற மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் போது, தங்கள் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன் என்பவர் ஊர் பகுதியில் உள்ள தனத இடத்தில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்து வருகிறார், இதனால் நிலத்தடி நீர் குறைவதோடு, அதனால் வெளியேற்றப்படும் உப்பு நீரினால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்த கிராம மக்கள் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஈச்சம்பட்டி கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளதாகவும், தற்போது, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தற்போது ஆலை உரிமம் பெறுவதற்கு, குரும்பலூர் பேரூராட்சியில் பத்து வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Next Story



