ரயில் நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் பாதை பயன்படுத்தப்படாமல் இருந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீண்டும் தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி அடுத்த மூக்கனூர் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூக்கனூர் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். அங்கு நிலம் மற்றும் வீடுகள் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மூக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் கிராமமக்கள் வலியுறுத்தினர். இதற்காக நேற்று மாலை விசிக, நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு செயல்பாட்டில் ஈடுபட்டனர் . மூக்கனூர் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். மேலும் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் அமைய உள்ள இடங்களில் நிலம் மற்றும் வீடு பாதிப்பு ஏற்படும் மக்கள் தனித்தனியே ஒப்புதல் தெரிவித்து கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். இதனால் அதே இடத்தில் ரயில் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story





