சாலை விபத்தில் நகை கடை ஊழியர் பலி

சாலை விபத்தில் நகை கடை ஊழியர் பலி
X
மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் நகை கடை ஊழியர் பலியானார்.
மதுரை சோழவந்தான் பகுதி வீர மலையின் மகன் பொன்ராஜ் வயது 23 மதுரையில் ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்தார் இவர் நேற்று (ஆக.1) காலை அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். கீழமாத்தூர் தனியார் பள்ளி அருகே உள்ள வேகத் தடையில் வந்த போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது மேலக்கால் நோக்கி சென்ற செப்டிக் டேங்க் லாரி மோதியதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜானகிராமன் படுகாயம் அடைந்தார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story