குமரி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

குமரி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
X
12 நாட்கள் நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று காலை தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம் ,அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த களப பூஜையை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினார். இன்று முதல் 15-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர் ,தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.
Next Story