திருச்சி சரக்கத்திற்குட்பட்டு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி சரக்கத்திற்குட்பட்டு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X
திருச்சி சரக்கத்திற்குட்பட்டு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு தலைக்கவசம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
அரியலூர், ஆக.10 - திருச்சி சரகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படுவதை உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஷைஃப் சிராஜுதீன் முன் முயற்சியில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி வட்டார தளபதியும், கே ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான கே.ராஜன் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி சரக்கத்திற்குட்பட்ட 330 ஊர்க்காவல் படையினர்களுக்கு தலை கவசங்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து ஊர்காவல் படையினர் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story