ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது நேற்று மாலை 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஆகஸ்ட் 12, காலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகாரித்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Next Story




