கணவன் மீது சுடு எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி

X
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, எஸ்.பாறைப்பட்டி அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37) இவருக்கு அபிநயா (35) என்ற மனைவியும், 16 வயது 6 வயதில் இரண்டு மகன்களும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளியான அசோக்குமாருக்கு வாடிப்பட்டி அடுத்த, சோழவந்தான் பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மனைவி அபிநயா எண்ணைய்யை காய்ச்சி சுடு எண்ணெயை அசோக்குமார் முகம் மற்றும் உடலில் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அசோக்குமாரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அசோக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் கணவன் மீது சுடு எண்ணெய் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட அபிநயா மற்றும் 15 வயது மகன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றார். கள்ளத்தொடர்பில் இருந்த கணவன் மீது மனைவி சுடு எண்ணைய் ஊற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

