கந்தரவகோட்டை குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம்பட்டியில் சுமார் 250கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் இந்த கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்ததாகும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆழ்குழாய் மோட்டாரில் பழுது ஏற்பட்டு கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் இன்றி அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்று தினசரி குடிநீர் எடுத்து வருவதாகவும் இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-கும் மேற்பட்ட பொதுமக்கள் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் திரு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story