ஆனைமலை: பிரதான குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர் !

X
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சி பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர சாலையில் வீணாகச் சென்றது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை உந்து நிலையத்தில் இருந்து வேட்டைக்காரன் புதூர், ஓடைய குளம், ஆனைமலை ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீருக்காக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை நீர் உந்து நிலையத்தில் இருந்து இன்று வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது ஆனைமலை முக்கோணம் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக ஆறு போல் சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்.
Next Story

