செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பேரூராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் கடைகளும் அதிக அளவில் உள்ளன. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக செல்போன் டவர் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிகே ஜெயசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

